Posts

2 (INDIA) பாரத தேசம் (INDIA), தமிழ்நாடு (TAMILNADU), தஞ்சாவூர் (THANJAAVUR) ஸ்ரீ ப்ருஹதீஸ்வர் திருக்கோயில் (SRI BRUHADEESWARAR TEMPLE) – குருவார வழிப்பாட்டுக்குழுவைச்சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட பக்தர்களில் ப்ரதிவாரம் முறையே 300 பக்தர்கள் வியாழக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு ஒன்று சேர்ந்து, பன்னிருத்திருமுறை பாடல்களை திருக்கோயில் முழுவதும் வலம் வந்து பாடி வருகின்றார்கள். கடந்த 70 ஆண்டுகளாக அவர்கள் வியாழக்கிழமைகளில் பாடிவருவதை வழக்கமாக கொண்டுள்ளதால், இந்த குழுவானது, குருவார வழிப்பாட்டுக்குழு என்று அழைக்கப்படுகிறது. தற்பொழுது (1995 முதல் தற்பொழுது வரை, திரு. சோம. ஆறுமுகம் மற்றும் திரு. ச. சம்பத் பிள்ளை ஆகியோர் முன்னின்று நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் திரு. A. லெக்ஷ்மிநாராயணன் மற்றும் பலர் பங்கேற்று வருகின்றனர்.